நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்கா சந்தித்துள்ள மிக நீண்ட அரசாங்க முடக்கநிலை: 39ஆவது நாளாக தொடர்கிறது 

வாஷிங்டன்:

அமெரிக்க அரசாங்க முடக்கம் 39-ஆவது நாளாகத் தொடர்கிறது. இதுவரை அமெரிக்க நாடு சந்தித்துள்ள மிக நீண்ட அரசாங்க முடக்கநிலை இது.

அமெரிக்க அரசாங்கம் முடங்கியிருப்பதால் ஊழியர்கள் சம்பளமின்றி வேலை செய்யவேண்டிய நிலை.

அவர்களில் சிலர் உடல்நலமில்லை என்று விடுப்பு எடுப்பதுடன், அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கத் தற்காலிக வேலைகளில் சேர்ந்துள்ளனர்.

ஆள்பற்றாக்குறையைச் சமாளிக்க 40 விமான நிலையங்களில் சேவைகள் குறைக்கப்படுமென நேற்று முதல் முறை அறிவிக்கப்பட்டது.

அறிவிப்பு நடப்புக்கு வந்தபோது 5,000க்கும் அதிகமான விமானச் சேவைகள் ரத்தாயின அல்லது தாமதம் அடைந்தன.

குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடிப்பதால் அரசாங்க முடக்கம் தொடர்கிறது.

மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் சுகாதார காப்புறுதிக் கட்டணம் தொடர்ந்து மலிவாகவே இருக்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சி வலியுறுத்துகிறது.

Medicaid திட்டத்துக்கு அரசாங்க நிதியைக் குறைக்கக் கூடாது என்பதும் ஜனநாயகக் கட்சியின் விருப்பம்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) அரசாங்க முடக்கநிலைக்கு ஜனநாயகக் கட்சியினரே காரணமென குறைகூறுகிறார்.

ஆதாரம்: AFP 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset