நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

யுனெஸ்கோ நிர்வாகக் குழு உறுப்பினராக மலேசியா தேர்வு: ஃபட்லினா

கோலாலம்பூர்:

யுனெஸ்கோ நிர்வாகக் குழு உறுப்பினராக  மலேசியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை தெரிவித்தார்.

2025 முதல் 2029 வரையிலான காலத்திற்கான ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) நிர்வாகக் குழுவில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் மலேசியா வரலாறு படைத்தது.

உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்ற 43ஆவது யுனெஸ்கோ பொது மாநாட்டில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

உலகளாவிய நல்வாழ்வுக்கான கல்வி, அறிவியல், கலாச்சாரத்தின் உலகளாவிய நிகழ்ச்சி நிரலை இயக்குவதில் மலேசியாவின் தலைமை, பங்களிப்பு, திறன்களுக்கான சர்வதேச அங்கீகாரம் இந்தத் தேர்வு அமைந்துள்ளது.

மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இந்த நம்பிக்கையை வழங்கிய அனைத்து யுனெஸ்கோ உறுப்பு நாடுகளுக்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

யுனெஸ்கோவிற்கான மலேசிய தேசிய ஆணையத்தின் தலைவரான ஃபட்லினா ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset