நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா மகளிர் பிரிவினருக்கு உரிய அங்கீகாரம் தேவை: சரஸ்வதி வலியுறுத்து

ஷா ஆலம்:

மஇகா மகளிர் பிரிவினருக்கு உரிய அங்கீகாரம் தேவை என்று அப்பிரிவின் தலைவர் சரஸ்வதி வலியுறுத்தினார்.

மஇகாவின் வளர்ச்சிக்கு மகளிர் பிரிவினர் முக்கிய பங்கை ஆற்றி வருகின்றனர்.

கட்சி கூட்டம் தொடங்கி பொதுத் தேர்தல் வரை மகளிர் பிரிவினர் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

ஆனால் இந்த மகளிர் பிரிவினருக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைப்பது இல்லை.

ஏன் கட்சியின் இரு தலைவர் மரணமடைந்தால் அனைத்து தலைவர்களும் திரண்டு செல்கின்றனர்.

ஆனால் மகளிர் பிரிவின் தலைவர்களுக்கு அது கூட இல்லை. ஆக இந்நிலை மாற வேண்டும்.

மஇகாவில் மகளிர் பிரிவினருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மகளிர்களும் அதிகம் இருக்க வேண்டும்.

இதுவே எனது முதன்மை கோரிக்கையாகும்.

மஇகா மகளிர், இளைஞர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் பேராளர் மாநாட்டில் பேசிய கெமலே சட்டமன்ற உறுப்பினருமான சரஸ்வதி  இவ்வாறு கூறினார்.

மஇகா மகளிர் பிரிவு தொடர்ந்து வலுவாக இருக்கும்.

அதே வேளையில் கட்சியின் தலைமைத்துவத்திற்கும் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset