செய்திகள் மலேசியா
ஆயிரம் பொய்கள் சொன்னாலும் இந்திய சமுதாயத்திற்காக போராடும் ஒரே கட்சி மஇகா தான்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
ஷாஆலம்:
ஆயிரம் பொய்கள் சொன்னாலும் இந்திய சமுதாயத்திற்காக போராடும் ஒரே கட்சி மஇகா தான்.
இதை யாராலும் மறுக்க முடியாது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
மஇகா புத்ரா பிரிவின் பேராளர் மாநாடு இன்று நடைபெறுகிறது. அதிகமான இளைஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
காரணம் நீங்கள் தான் கட்சியின் எதிர்காலம். கட்சியின் தொடர்ந்து உழைக்க போகும் வருங்கால தலைவர்கள் நீங்கள்.
ஆக மஇகாவின் வரலாறுகள் போராட்டங்கள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
மஇகாவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் சுமத்துவார்கள். ஒன்றை மட்டும் உங்களிடம் சொல்லி கொள்கிறேன்.
ஆயிரம் பொய்கள் சொன்னாலும் சமுயாதத்திற்காக போராடும் ஒரே கட்சி மஇகா தான்.
நாங்கள் சமுதாயத்தின் குரல்கள் என்று கூறியவர் இன்று ஊமையாகி விட்டனர். இது உங்களுக்கே தெரியும்.
ஆக அதிகமான இளைஞர்கள் மஇகாவில் இணைய வேண்டும். கட்சியை இன்னும் வலுபடுத்த வேண்டும்.
அதன் அடிப்படையில் அடுத்தாண்டும் மஇகா தேசிய புத்ரா மாநாடு நடைபெறவுள்ளது.
இம்மாநாடு பிரமாண்டமாகவும் பெரிய அளவிலும் நடத்தப்படும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 8, 2025, 6:38 pm
ஈப்போ ஜாலான் துன் ரசாக் மேம்பால நிர்மாணிப்பு பணிகளை துரிதப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
November 8, 2025, 4:28 pm
அம்னோ மீது கோபமில்லை; முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மஇகா உள்ளது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
November 8, 2025, 3:41 pm
கிள்ளான் புக்கிட் திங்கி பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம்: இந்திய ஆடவர் மரணம்
November 8, 2025, 12:06 pm
கோவிட்-19 காலத்தில் உணவுக் கூடைகள் தான் கொடுக்க முடியும்; வேறு என்ன கொடுப்பது?: டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி
November 8, 2025, 11:48 am
