செய்திகள் மலேசியா
கோவிட்-19 காலத்தில் உணவுக் கூடைகள் தான் கொடுக்க முடியும்; வேறு என்ன கொடுப்பது?: டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி
ஷாஆலம்:
கோவிட்-19 காலத்தில் உணவுக் கூடைகள் தான் கொடுக்க முடியும்.
வேறு என்ன கொடுக்க முடியும்.
மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இக்கேள்வியை எழுப்பினார்.
மக்களவையில் மித்ரா குறித்து விவாதம் நடந்தது.
அப்போது நான், மித்ரா கீழ் தற்போது உணவுக் கூடைகள் வழங்கப்படுகிறது. அது நல்ல விஷயம் தான்.
ஆனால் இந்தியர் உருமாற்றத்திற்கான உருவாக்கப்பட்டது தான் மித்ரா.
அதனால் மித்ராவின் கீழ் அத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். உணவுக் கூடைகளை அல்ல என்றேன்.
உடனே இதற்கு பதிலளித்தவர்கள் நான் அமைச்சரவையில் இருந்த போது தான் அதிகமான உணவுக் கூடைகள் வழங்கப்பட்டது என்கிறார்கள்.
உண்மை தான். அப்போது நாடே கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது.
அப்போது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் தான் அவர்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டது.
இந்த சூழலில் உணவுக் கூடைகள் வழங்காமல் நாங்கள் வேறு என்ன தருவது. ஆக விஷயம் தெரியாமல் யாரும் பேசக் கூடாது.
மஇகா மகளிர், இளைஞர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்த டத்தோஸ்ரீ சரவணன் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 8, 2025, 4:28 pm
அம்னோ மீது கோபமில்லை; முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மஇகா உள்ளது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
November 8, 2025, 3:42 pm
ஆயிரம் பொய்கள் சொன்னாலும் இந்திய சமுதாயத்திற்காக போராடும் ஒரே கட்சி மஇகா தான்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
November 8, 2025, 3:41 pm
கிள்ளான் புக்கிட் திங்கி பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம்: இந்திய ஆடவர் மரணம்
November 8, 2025, 11:48 am
மஇகா மகளிர் பிரிவினருக்கு உரிய அங்கீகாரம் தேவை: சரஸ்வதி வலியுறுத்து
November 8, 2025, 11:25 am
