நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா புத்ரி பிரிவின் மாபெரும் மாநாடு அடுத்தாண்டு நடைபெறும்; டத்தோ கீதாஞ்சலி ஜி ஒருங்கிணைப்பாளர்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவிப்பு

ஷாஆலம்:

மஇகா புத்ரி பிரிவின் மாபெரும் மாநாடு அடுத்தாண்டு நடைபெறவுள்ளது.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

புத்ரி பிரிவின் தேசிய பேராளர் மாநாடு இன்று நடைபெறுகிறது.

ஆனால் இம்மாநாட்டில் கலந்து கொண்ட புத்ரிகளின் எண்ணிக்கையை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது.

காரணம் இளைய தலைமுறையினர்  அதிகம் கட்சியில் இணைய வேண்டும் என்பது தலைமைத்துவத்தின் இலக்காகும்.

அதன் அடிப்படையில் புத்ரி மாநாடு என்றால் குறைந்தது 1,500 பேர் கலந்து கொள்ள வேண்டும்.

ஆக வரும் காலங்களில் மகளிர், இளைஞர் மாநாடுகள் தனியாகவும் புத்ரா, புத்ரி பிரிவுகள் தனித் தனியாக நடத்தப்பட வேண்டும்.

இது குறித்து தேசிய மஇகா ஆலோசித்து உரிய முடிவை எடுக்கும்.

மேலும் மஇகா புத்ரி பிரிவின் மாபெரும் மாநாடு அடுத்தாண்டு நடத்தப்படவுள்ளது.

ஜனவரி 15ஆம் தேதிக்கு பின் இம்மாநாடு நடத்தப்படும்.

அதே வேளையில் டத்தோ கீதாஞ்சலி ஜி இம்மாநாட்டிம் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டத்தோ ஆனந்தனுடன் அவர் ஒன்றினைந்து செயல்படுவார்.

மஇகா புத்ரி பிரிவை வலுப்படுத்தும் நோக்கில் இம்மாநாடு நடத்தப்படும்.

அம்மாநாட்டிற்கான நிரல் அனைத்தும் முழுமையாக திட்டமிடப்படும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset