நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கைரி மீண்டும் அம்னோவுக்கு திரும்பிவார் என நம்புகிறேன்: அக்மால்

கோலாலம்பூர்:

கைரி ஜமாலுடின் மீண்டும் அம்னோவுக்கு திரும்புவார் என நம்புகிறேன்.

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே இதனை கூறினார்.

கைரி ஜமாலுடினின் அரசியல் நகர்வைச் சுற்றியுள்ள மர்மம் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை.

இருந்தாலும் முன்னாள் அமைச்சர் மீண்டும் கட்சியில் சேருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர் ஒரு நேர்மறையான சமிக்ஞையை அளித்துள்ளது.

அம்னோ பிரிவு உண்மையில் திறந்திருக்கும்.

மேலும் எந்தக் கட்சித் தலைவரும் மீண்டும் அவர்களுடன் சேர விரும்பினால் அதை வரவேற்கிறது.

இடைநீக்கம் செய்யப்பட்டாலும் சரி அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டாலும் சரி  அம்னோவுக்கு விசுவாசத்தைக் காட்டி அவர் மீண்டும் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

நிச்சயமாக கைரி மீண்டும் திரும்புவார் என்று நம்புகிறேன்.
அம்னோ இளைஞர் தலைவராக எனது முதல் ஆண்டிலிருந்து இந்தக் கட்சியைப் பிரிக்க முடியாது என்று நான் கூறி வருகிறேன்.

அம்னோ ஒன்றுபட வேண்டும், அந்த உறுப்பினர்கள் இன்னும் விசுவாசமாகவும் அம்னோவின் போராட்டத்தில் நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset