நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோ மீது கோபமில்லை; முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மஇகா உள்ளது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

ஷாஆலம்:

இந்திய சமுதாயத்தின் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மஇகா உள்ளது.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ  எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

நாட்டில் வாழும் இந்திய சமுதாயத்திற்கு அரசியல் பலம் வேண்டும்.

இந்த பலம் இல்லை என்றால் வரும் காலத்தில் சமுதாயம் மிகப் பெரிய பாதிப்பை எதிர்நோக்கும்.

ஏற்கெனவே பலரின் ஆசை வார்த்தைகளை நம்பி இந்திய சமுதாயம் தற்போது அநாதையாக உள்ளது.

குறிப்பாக எம்ஜிஆர் அப்போதே இறந்து விட்டார் என நான் கூறினேன். யாருமே அதை நம்பவில்லை.

ஆனால் இன்று அதற்கான பலனை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

ஆக இந்திய சமுதாயம் அரசியல் ரீதியில் பலமாக இருக்க வேண்டும்.

இந்த அரசியல் பலம் அதிகமான சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளை கைவசம் இருந்தால் மட்டுமே கிடைக்கும்.

இதன் அடிப்படையில் தான் சமுதாயத்தின் நலன் கருதி ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மஇகா உள்ளது.

இந்த முடிவு தேசிய முன்னணியில் இருந்து  மஇகா வெளியேறுவதாக இருக்கலாம் அல்லது வெளியேறாமலும் போகலாம்.

மேலும் அம்னோ மீது எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. அம்னோ தலைவர்களுக்கும் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது.

இருந்தாலும் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம்.

இதற்கு எல்லாம் பொது நலன் மட்டுமே காரணம். மாறாக சுயநலம் அல்ல.

மஇகா இளைஞர் பிரிவு மாநாட்டில் பேசிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்







தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset