செய்திகள் மலேசியா
மலாய்க்காரர்கள் அதிகம் இருக்கும் தொகுதிகளில் ஜசெக தலைவர்கள் போட்டியிட முடியுமா?; அங்கீகாரம் கிடைக்கும் இடத்தை நோக்கி மஇகா முன்னோக்கி செல்லும்: டத்தோஸ்ரீ சரவணன்
ஷாஆலம்:
கட்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் இடத்தை நோக்கி மஇகா முன்னோக்கி செல்லும்.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
கடந்த 2010ஆம் ஆண்டு உலு சிலாங்கூரில் இடைத் தேர்தல் நடைபெற்றது.
அப்போது நடந்த சர்ச்சையில் நாங்கள் தேர்வு செய்யும் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றால் மஇகா தேசிய முன்னணியில் இருந்து விலகும் என அப்போதைய தலைவர் துன் சாமிவேலு கூறினார்.
துன் சாமிவேலு செய்த இம்முடிவு ஒரு வரலாறாகும்.
இதன் அடிப்படையில் மஇகாவுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்.
அந்த மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும் இடைத்தை நோக்கி மஇகா முன்னோக்கி செல்லும்.
இதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது.
மஇகா மகளிர், இளைஞர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்த டத்தோஸ்ரீ சரவணன் இவ்வாறு கூறினார்.
பேராவில் உள்ள ஆட்சிக் குழு உறுப்பினர் மஇகா குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பேராக்கில் இரண்டு தொகுதிகளில் மஇகா தோல்வி கண்டனது.
இதனால் அக்கட்சிக்கு பொறுப்புகள் கிடைக்காது என்று கூறியுள்ளார்.
அத்தலைவருக்கு ஒரு சவால் விடுக்கிறேன்.
அடுத்த தேர்தலில்.ஜசெகவில் உள்ள இந்திய தலைவர்கள் மலாய், இந்திய வாக்காளர்கள் அதிகம் இருக்கும் தொகுதிகளில் போட்டியிட முடியுமா?.
இத்தனை காலம் சீனர்கள் அதிகம் இருக்கும் தொகுதிகளின் தான் அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகின்றனர். இதை அவர்கள் மறந்து விடக் கூடாது.
மேலும் 60 ஆண்டுகளாக மஇகா ஒன்றும் செய்யவில்லை. சமுதாயத்தை ஏமாற்றி விட்டது என்று குற்றம் சாட்டினர்.
ஆனால் கடந்த தேர்தலுக்கு பின் ஆட்சியமைக்க தேசிய முன்னணி ஆதரவு தேவை என்பதால் மஇகாவை தேடினார்.
அப்போது எங்கே போனது அவர்களின் கொள்கையும் கோட்பாடும்.
ஆக இவர்கள் எல்லாம் கொள்கை இல்லாத தலைவர்கள் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 8, 2025, 4:28 pm
அம்னோ மீது கோபமில்லை; முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மஇகா உள்ளது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
November 8, 2025, 3:42 pm
ஆயிரம் பொய்கள் சொன்னாலும் இந்திய சமுதாயத்திற்காக போராடும் ஒரே கட்சி மஇகா தான்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
November 8, 2025, 3:41 pm
கிள்ளான் புக்கிட் திங்கி பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம்: இந்திய ஆடவர் மரணம்
November 8, 2025, 12:06 pm
கோவிட்-19 காலத்தில் உணவுக் கூடைகள் தான் கொடுக்க முடியும்; வேறு என்ன கொடுப்பது?: டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி
November 8, 2025, 11:48 am
மஇகா மகளிர் பிரிவினருக்கு உரிய அங்கீகாரம் தேவை: சரஸ்வதி வலியுறுத்து
November 8, 2025, 11:25 am
