நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடுத்த பொதுத் தேர்தலுக்குள் உறுப்பினர்கள் எண்ணிக்கையை மஇகா இளைஞர் பிரிவு மேலும் வலுப்படுத்தும்: அர்விந்த்

ஷாஆலம்:

அடுத்த  பொதுத் தேர்தலுக்குள் உறுப்பினர்கள் எண்ணிக்கையை மஇகா இளைஞர் பிரிவு மேலும் வலுப்படுத்தும்.

அப்பிரிவின் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் இதனை கூறினார்.

மஇகா இளைஞர் பிரிவின் தலைவராக பொறுப்பேற்றது முதல் பல நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டேன்.

குறிப்பாக இளைஞர் பிரிவில் உள்ள பிளவுகளை கலைந்து தற்போது இன்று அப்பிரிவு வலுவாகவும் உறுதியாகவும் உள்ளது.

அதே வேளையில் இளைஞர் பிரிவின் உறுப்பினர்களின் நலனுக்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக இளைஞர்களின் உயர் கல்வி, வேலை வாய்ப்பு, சமூக சீர்கேடு பிரச்சினைகள் என அனைத்திலும் கவனம் செலுத்தப்பட்டது.

அதே வேளையில் சமூக மக்கள் பயன் பெறும் நோக்கிலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மஇகா மகளிர், இளைஞர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் பேராளர் மாநாட்டில் பேசிய அர்விந்த் கிருஷ்ணன் இவ்வாறு கூறினார்.

மஇகா இளைஞர் பிரிவின் அடுத்த இலக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும்.

குறிப்பாக அடுத்த தேர்தலுக்குள் உறுப்பினர்கள் எண்ணிக்கையை
மஇகா இளைஞர் பிரிவு மேலும் வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset