நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிள்ளான் புக்கிட் திங்கி பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம்: இந்திய ஆடவர் மரணம்

கிள்ளான்:

கிள்ளான் பெட்ரோல் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இந்திய ஆடவர் மரணமடைந்தார்.

இங்குள்ள கிள்ளான், புக்கிட் திங்கியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவுகள் தற்போது  சமூக ஊடகங்களில் வைரலானது.

மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர்,  பெட்ரோல் நிரப்பி வந்த ஒரு வாடிக்கையாளரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக நம்பப்படுகிறது.

பொதுமக்களில் ஒருவரால் பதிவு செய்யப்பட்ட தனி வீடியோவில், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இரத்தக்கறை படிந்த ஒருவரை வாகனத்தில் ஏற்றிச் செல்வதைக் காணலாம்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் ஒரு உள்ளூர் நபர் என்பதை சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஷசாலி கஹார் உறுதிப்படுத்தினார்.

நேற்று இரவு 11.13 மணிக்கு இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் 34 வயதுடைய உள்ளூர்வாசி என்றும், அவர் வேலையில்லாமல் இருந்தவர் என்றும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

மேலும் விசாரணையில், சந்தேக நபர் காரின் முன்பக்கத்தில் பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தி, பாதிக்கப்பட்டவரின் உடலைத் தாக்கியதாக நம்பப்படுகிறது.

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அதற்கான நோக்கம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset