நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா, பஹ்ரைன் உறவுகள் அதிக ஒத்துழைப்புக்கான ஆற்றலைக் கொண்டுள்ளன: மாமன்னர்

மனாமா:

மலேசியாவிற்கும் பஹ்ரைனுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளும் நெருங்கிய நட்பும் அதிக ஒத்துழைப்புக்கான ஆற்றலைக் கொண்டுள்ளன.

மாட்சிமை தங்கிய மாமன்னர், சுல்தான் இப்ராஹிம் இதனை கூறினார்.

பஹ்ரைன் மலேசியாவிற்கு ஒரு முக்கியமான மூலோபாய பங்காளியாகும்.
பஹ்ரைன் பொருளாதார தொலைநோக்கு 2030க்கு ஏற்ப பொருளாதார அம்சத்தில் வலுப்படுத்தப்பட வேண்டும்.

பஹ்ரைனும் மலேசியாவும் ஒருவருக்கொருவர் மதிக்கின்றன.

மேலும் சகோதரத்துவ உணர்வைக் கொண்டுள்ளன, மக்களின் அமைதி, செழிப்பு, முன்னேற்றத்திற்கான மதிப்புகள், அபிலாஷைகள், அர்ப்பணிப்பைப் பகிர்ந்து கொள்கின்றன.

இந்த அரசுமுறைப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் எதிர்கால திசையை வடிவமைப்பதில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்கும் என்று நான் நம்புகிறேன்.

பஹ்ரைன் மன்னர் ஹமத் இசா அல் கலீஃபா நேற்று இரவு இஸ்தானா சாகிரில் நடத்திய அரசு விருந்தில் பாராட்டப்படுவதற்கு முன்பு, சுல்தான் இப்ராஹிம் தனது உரையில் இவ்வாறு கூறினார். 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset