நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா மாநிலத் தேர்தல்; தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி இடையே தொகுதி மோதல் இல்லை: ஹசான்

கோத்தா கினபாலு:

சபா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி இடையே தொகுதி மோதல்கள் இல்லை.

தேசிய முன்னணி துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை கூறினார்.

போட்டியிட வேண்டிய இடங்கள் குறித்து தேசிய முன்னணி உள்ளேயே இன்னும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
இதனால் மடானி அரசாங்கத்தை உருவாக்கும் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் நிச்சயமாக ஏற்படாது.

வரவிருக்கும் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றியை உறுதி செய்ய நவம்பர் 29 வாக்கெடுப்பு வரை அதன் தேர்தல் கேந்திரம் தொடர்ந்து நகர வேண்டும்,"

நேற்று பூட்டாடனில் உள்ள கம்போங் காண்டோ குடியிருப்பாளர்களுடன் சந்திப்பிற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சபா மாநிலத் தேர்தலில் தஞ்சோங் கெராமட் மாநில சட்டமன்றத் தொகுதிக்கான கட்சியின் வேட்பாளராக பூட்டாட்டன் அம்னோ பிரிவுத் தலைவர் ஜெஃப்ரி நோர் முகமதுவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset