நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இங்கிலாந்துக்கு விடுமுறையில் செல்லும் ஆசை தோல்வி; 8.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் 2 ஜோடிகள் கைது: ஷுஹாய்லி

சிப்பாங்:

இங்கிலாந்துக்கு விடுமுறையில் செல்லும் இரண்டு ஜோடிகளின் ஆசை தோல்வியில் முடிந்தது.

மேலும்  8.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஷுஹாய்லி முஹம்மத் ஜைன் இதனை கூறினார்.

இங்கிலாந்தின் மென்செஸ்டருக்குச் செல்ல இரண்டு ஜோடிகளின் ஆசை, மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு துறையால் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து, தோல்வியடைந்தது.

20 வயதுடைய இரண்டு உள்ளூர் தம்பதிகளும் கடந்த திங்கட்கிழமை 86 கிலோகிராம் எடையுள்ள நான்கு பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 68 போதைப்பொருள் பாக்கெட்டுகளுடன் கைது செய்யப்பட்டனர்.

இதன் மொத்த மதிப்பு 8.3 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இரவு 8.15 மணியளவில் அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

அப்போது தம்பதிகளில் ஒருவர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை.

மேலும் அவர்களின் பெட்டிகள் மீண்டும் ஸ்கேன் செய்யப்பட்டன.

பெட்டிகளை ஸ்கேன் செய்ததில் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தம்பதியினரும் முன்பு சோதனை செய்த மற்றொரு தம்பதியினரும் தடுத்து வைக்கப்பட்டனர்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில்  நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset