நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாஸ்டர் கோ, அம்ரி வழக்கு: உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஏஜிசி மேல்முறையீடு செய்யும்

கோலாலம்பூர்:

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட், பாஸ்டர் ரேமண்ட் கோ ஆகியோரின் வழக்கில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அட்டர்னி ஜெனரல் அலுவலகம் மேல்முறையீடு செய்யும்.

இரண்டு தனித்தனி அறிக்கைகளில், இரண்டு நபர்களின் காணாமல் போனதற்கு அரசாங்கமும் போலிஸ்படையும் பொறுப்பேற்ற முடிவுக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு அறிவிப்பை தாக்கல் செய்வதாக ஏஜிசி அறிவித்துள்ளது.

நேற்று, நீதிபதி சு தியாங் ஜூ, அம்ரி காணாமல் போனதற்கு போலிஸ் துறையும் அரசாங்கமும் நேரடியாகப் பொறுப்பு என்று தீர்ப்பளித்தார்.

மேலும் அவரது மனைவி நோர்ஹயாதி அரிஃபினுக்கு அரசாங்கம் 3 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

நீதிபதி தனது தீர்ப்பை வழங்க கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டார்.

மேலும் பொது இழப்பீடுகளாக 2 மில்லியன் ரிங்கிட்டையும் முன்மாதிரியான இழப்பீடுகளாக 1 மில்லியன் ரிங்கிட்டை வழங்கினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset