நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமரைப் பற்றிய போலிச் செய்திகள்; சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்: MCMC

சைபர்ஜெயா:

பிரதமரைப் பற்றிய போலிச் செய்திகள் தொடர்பிலான சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்.

எம்சிஎம்சி எனும் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் இதனை கூறியது.

தான் கையெழுத்திட்ட மலேசிய, அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் பல பலவீனங்கள் இருப்பதாக பிரமதர் டத்தோஸ்ரீ அன்வார் ஒப்புக்கொண்டதாகக் கூறி போலிச் செய்திகளைப் பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த போலி செய்தியை பதிவேற்றியதாக சந்தேகிக்கப்படும் ஒரு நபரை எம்சிஎம்சி விசாரித்து வருகிறது.

உத்துசான் மலேசியா ஊடகத்தின் பெயரை பயன்படுத்தி இந்தப் போலிச் செய்தி வெளியிடப்பட்டது.

சந்தேக நபர் இன்று மலாக்காவில் உள்ள அலோர் காஜா மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் விசாரிக்கப்பட்டார். மேலும் அவரது கைத்தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு, பல்லூடக சட்டத்தின் பிரிவு 233 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset