நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாதிரியார் ரேமண்டின் குடும்பத்திற்கு 31 மில்லியன் ரிங்கிட் வழங்க அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர்:

பாதிரியார் ரேமண்டின் குடும்பத்திற்கு 31 மில்லியன் ரிங்கிச் வழங்க  அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கடத்தலில் பாதிரியார் ரேமண்ட் கோவின் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குடும்பத்தினருக்கு சுமார் 31 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கும் போலிஸ்க்கும் உத்தரவிட்டுள்ளது.

2017 பிப்ரவரி 13ஆம் தேதி அன்று அவர் காணாமல் போனதிலிருந்து காவல்துறை அவர் இருக்கும் இடத்தை வெளிப்படுத்தும் வரை ஒரு நாளைக்கு 10,000 ரிங்கிட் இழப்பீடு வழங்குமாறு நீதிபதி டத்தோ சு தியாங் ஜூ அரசாங்கத்திற்கு உத்தரவிட்டார்.

ஜாலான் எஸ்எஸ்4பி/10, பெட்டாலிங் ஜெயாவில் வாகனம் ஓட்டிச் சென்றபோது ரேமண்ட் கடத்தப்பட்டார். 

இன்று வரை அவர் காணாமல் போய் 3,188 நாட்கள் ஆகிறது.

முன்னாள் போலிஸ் அதிகாரிகள் உட்பட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டோர் ரேமண்டின் கடத்தலில் ஈடுபட்டதாகவும், ஒரே அறிவுறுத்தலின் கீழ் செயல்பட்டதாகவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் வழக்கு தொடுப்பவருக்கு 250,000 ரிங்கிட் செலவுகளை செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset