நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரஸ்மா புதிய தலைவர் டத்தோ மொஹ்சினுக்கு பாராட்டு விழா 

கோலாலம்பூர்:

மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கமான பிரஸ்மாவின் புதிய தலைவர் டத்தோ மொஹ்சினுக்கு பாராட்டுவிழா நேற்று 6 ஆம் தேதி இரவு தலைநகர் செய்யத் பிஸ்ட்ரோ டாங் வாங்கி மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை எஸ். எம். எஸ் தீன் குழுமத்தின் தலைவர் டத்தோ சிராஜுதீன் ஒருங்கிணைத்தார். மலேசியா முஸ்லிம் வர்த்தகர்கள் சம்மேளனம், சிம்ஸ் அமைப்பு, செய்யது உணவகக்குழுமம் ஆகிய அமைப்புகளின் ஆதரவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக வழக்கறிஞர் ஃபரிதா வரவேற்புரையாற்றினார். அவரைத்தொடர்ந்து சிம்ஸ் தலைவர் டத்தோ எம். இசட். கனி கிம்மாவின் தலைவர் டத்தோஸ்ரீ  செய்யது இப்ராஹிம், மிம்காய்ன் தலைவர் டத்தோ பி வி அப்துல் ஹமீத், பிரஸ்மாவின் முன்னாள்  தலைவர் டத்தோ ஜமருல் கான், பிரஸ்மாவின் மேனாள் தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி, பெர்மிம் தலைவர் பரிதுத்தீன், முஃமீன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் ஆகியோர் டத்தோ மொஹ்சின் சமுதாயத்திற்கு ஆற்றிவரும் பணிகளையும், சேவைகளையும் பட்டியலிட்டு புகழ்ந்துரைத்தனர். 

சமுதாயத்தின் பல்வேறு அமைப்பின் தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டத்தோ மொஹ்சினுக்கு சிறப்பு செய்தனர்.

நிகழ்ச்சியை துவான் அஸ்லம் தொகுத்து வழங்கினார். முன்னதாக, பெர்மிம் துணைத்தலைவர் அஸ்ரினின் பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி துவங்கியது.

- ஃபிதா 
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset