செய்திகள் மலேசியா
சபா தேர்தலில் கெஅடிலான் கட்சியின் பிரச்சாரங்கள் திறம்பட மேற்கொள்ளப்படும்: டாக்டர் சத்யா பிரகாஷ்
கோத்தா கினபாலு:
சபா மாநிலத் தேர்தலில் கெஅடிலான் கட்சியின் பிரச்சாரங்கள் திறம்பட மேற்கொள்ளப்படும்.
கெஅடிலான் கட்சியின் பிரச்சார குழுவின் உயர் மட்ட தலைவரும், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் கூறினார்.
சபா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கெஅடிலான் கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கை திறக்கப்பட்டுள்ளது.
தற்போது சபாவில் களம் இறங்கி இந்த தேர்தல் பிரச்சார நடவடிக்கை டாக்டர் சத்தியபிரகாஷ் இந்த அறையை பார்வையிட்டார்.
சிலாங்கூர் தேர்தல் குழுவின் உயர்மட்ட குழுவின் துணை இயக்குநர் சுரேஸ், துணை இயக்குநர் ஹனாஃபி ஆகியோர், சபாவின் கோத்தா கினாபாலுவில் உள்ள ஜேபிஆர்என் சிலாங்கூர் குழுவுடன் சேர்ந்து, சபா மாநிலத் தேர்தலுக்கான மக்கள் நீதிக் கட்சியின் பிரதான இயக்க அறையை பார்வையிட்டனர்.
மேலும் ராஃபருடன் முக்கிய ஆலோசனையும் நடைபெற்றது.
சபா மண்ணில் தேர்தல் பிரச்சார பணி நம்பிக்கையுடனும் திறம்படவும் தொடர்ந்து நகர்வதை உறுதிசெய்ய ஒவ்வொரு உத்தியும் செம்மைப் படுத்தப்பட்டதாக டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.
உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து, கலைமகள் உட்பட பலரும் இப்போது சபாவில் இருக்கிறார்கள்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 7, 2025, 2:48 pm
படிக்கட்டுகளில் இந்திய ஆடவர் வெட்டிக் கொலை: 6 இந்திய நாட்டவர் கைது
November 7, 2025, 2:47 pm
இரண்டு வாரங்களில் வெளிநாட்டினரால் ஓட்டப்பட்ட 25 குப்பை லோரிகளை ஜேபிஜே பறிமுதல் செய்தது
November 7, 2025, 12:29 pm
பிரஸ்மா புதிய தலைவர் டத்தோ மொஹ்சினுக்கு பாராட்டு விழா
November 7, 2025, 11:19 am
சபா மாநிலத் தேர்தல்; தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி இடையே தொகுதி மோதல் இல்லை: ஹசான்
November 7, 2025, 11:14 am
உப்சி மாணவர்கள் விபத்து: உரிம நிபந்தனைகளை நிறுவனம் பின்பற்றத் தவறியதால் 20,000 ரிங்கிட் அபராதம்
November 7, 2025, 9:20 am
பாஸ்டர் கோ, அம்ரி வழக்கு: உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஏஜிசி மேல்முறையீடு செய்யும்
November 6, 2025, 12:17 pm
