நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உப்சி மாணவர்கள் விபத்து: உரிம நிபந்தனைகளை நிறுவனம் பின்பற்றத் தவறியதால் 20,000 ரிங்கிட் அபராதம்

கிரிக்:

உப்சி மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உரிம நிபந்தனைகளை நிறுவனம் பின்பற்றத் தவறியதால் 20,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

சுற்றுலாத் தொழில் சட்டம் 1992 [சட்டம் 482] இன் கீழ் உரிமம் இல்லாமல் சுற்றுலா இயக்க வணிகத்தை மேற்கொண்ட நோரீன் மாஜு டிரேடிங் நிறுவனத்திற்கு PLD 8892 என்ற பதிவு எண் கொண்ட சுற்றுலா பேருந்தை விற்றதற்காகவும், பேருந்து அனுமதிச் சீட்டை வாடகைக்கு எடுத்ததற்காகவும் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர், கெனாரி உதாரா டிராவல் & டூர்ஸ் என்ற பேருந்து நிறுவனத்திற்கு 20,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த ஜூன் 9ஆம் தேதி பேராக்கின் கிரிக்கில் உப்சி மாணவர்கள் குழுவை தஞ்சோங் மாலிம் வளாகத்திற்கு அழைத்துச் செல்லும் போது, ​​நோரீன் மாஜு டிரேடிங் இயக்கும் சுற்றுலா பேருந்து ஒரு பயங்கரமான விபத்தில் சிக்கியது.

நவம்பர் 3ஆம் தேதி கிரிக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் அந்த நிறுவனத்திற்கு தண்டனை வழங்கப்பட்டது.

உரிமம் பெறாத தரப்பினருடனான பரிவர்த்தனைகளைத் தடைசெய்யும் உரிமத்தின் நிபந்தனைகளுக்கு இணங்கத் தவறியதற்காக சுற்றுலாத் தொழில் விதிமுறைகள் 1992 இன் ஒழுங்குமுறை 6(1)(எப்) இன் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளில் நிறுவனம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset