செய்திகள் விளையாட்டு
சிலாங்கூர் அணி நிர்வாகம் மீதான அதிருப்தியை வெளிப்படுத்திய ரசிகர்கள்
பெட்டாலிங் ஜெயா:
சிலாங்கூர் அணி நிர்வாகம் மீதான அதிருப்தியை நேற்று ரசிகர்கள் ஆரவாரத்துடன் வெளிப்படுத்தினர்.
எம்பிபிஜே கால்பந்து அரங்கில் ஆசிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் சிலாங்கூர் அணியினர் 2-3 என்ற கோல் கணக்கில் பெர்சிப் பண்டோங் அணியிடம் தோல்வி கண்டனர்.
இதனால் அதிருப்தியடைந்த ஆயிரக்கணக்கான சிலாங்கூர் ரசிகர்கள் அரங்கின் பிரதான வாயிலுக்கு முன்னால் கூடினர்.
அப்போது ரசிகர்கள் அதன் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஜோஹன் கமல் ஹமிடன், உயர் நிர்வாகத்தின் பல பெயர்களை முழக்கமிட்டனர்.
மேலும் ஜோஹனைத் தேடி பல ஆதரவாளர்கள் அரங்கில் இருக்கையின் முக்கிய பகுதியை உடைத்து விஐபி அறைக்குள் நுழைய முயன்றதாக அறியப்படுகிறது.
நிர்வாகத்திற்கு எதிரான எதிர்ப்பின் அடையாளமாக ஆதரவாளர்கள் அரங்கின் வெளியேறும் இடத்தைத் தடுக்க முயற்சிப்பதையும் காண முடிந்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2026, 10:45 am
ஸ்லாட் சரியான நேரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டார்: ஜெரார்ட்
May 31, 2026, 10:45 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி சாம்பியன்
May 30, 2026, 9:46 am
2030 உலகக் கிண்ண போட்டியிலும் ரொனால்டோவால் விளையாட முடியும்: நிர்வாகி
May 29, 2026, 12:50 pm
சிந்து புகழ்ந்த மலேசிய இளம் நட்சத்திரம் ஆரோன் தாய்: சர்வதேச அரங்கில் அதிரடி கவனம்
May 29, 2026, 10:02 am
மலேசிய சிலம்பக் கழகத்தின் தேசிய துணைத் தலைவராக டாக்டர் உதயகுமார் வெற்றி
May 29, 2026, 9:54 am
உலகக் கிண்ண போட்டிக்கான அமெரிக்க விசாக்களுக்காக ஈரான் இன்னும் காத்திருக்கிறது
May 29, 2026, 9:49 am
