நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிகார் மாநிலத்தின் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

பீகார்: 

பீகாரில் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியநிலையில் மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது. 

முதற்கட்ட வாக்குப்பதிவில் 121 தொகுதிகளில் 1,314 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அதிகபட்சமாக பெகுசராய் மாவட்டத்தில் 59.82% வாக்குகள் பதிவாகி உள்ளன. தலைநகர் பாட்னாவில் 48.69% வாக்குகள் பதிவாகி உள்ளன.

விவிஐபிக்கள் போட்டியிடும் தொகுதிகளான ரகோபூரில் 55.20%, மஹூவாவில் 52.11%, தாராபூரில் 55.33%, லக்கிசராயில் 55.47%, சாப்ராவில் 50.88%, பன்கிபூரில் 34.80%, புல்வாரியில் 54.12%, ரகுநாத்பூரில் 50.63%, சிவணில் 51.65%, மொகாமாவில் 55.12% வாக்குகள் பதிவாகி உள்ளன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset