நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு 

புதுடெல்லி: 

அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, ஆட்சி திருட்டு நடந்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களுடன் விளக்கி உள்ளார். 8 வாக்காளர்களில் ஒரு போலி வாக்காளரை சேர்த்து பாஜவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து சதி செய்திருப்பதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். 

நாடு முழுவதும் பாஜவின் வெற்றிக்காக அக்கட்சிக்கு எதிரானவர்களின் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் திட்டமிட்டு நீக்கப்படுவதாகவும், போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவதாகவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும் வகையில், கர்நாடகாவில் ஒரே தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது தொடர்பான ஆதாரங்களை ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 

மேலும், பாஜவுடன் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து வாக்குகளை திருடவும், போலி வாக்காளர்களை பாதுகாக்கவும் சதி செய்வதாக கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களை நீக்க நடந்த மோசடிகளையும் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் ஆதாரங்களுடன் நிரூபித்தார். 

இதைத் தொடர்ந்து, பாஜவின் வாக்கு திருட்டு தொடர்பாக ஹைட்ரஜன் குண்டை வீசப் போவதாக சமீபத்தில் எச்சரித்திருந்த ராகுல் காந்தி, டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து, அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் நடந்த தில்லுமுல்லுகளை ‘எச் பைல்ஸ்’ என்ற தலைப்பில் விரிவான ஆதாரங்களுடன் விளக்கினார்.

அப்போது ராகுல் காந்தி கூறியதாவது: உண்மை தான் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. இந்தியாவும் உண்மையின் பாதையில் பயணிக்கிறது. அந்த வகையில், நான் 100 சதவீதம் உண்மையை மட்டும் கூற விரும்புகிறேன். ‘எச் பைல்ஸ்’ என்பது ஒரு மாநிலமே எப்படி திருடப்பட்டது என்பது பற்றியது. வாக்கு திருட்டு என்பது ஒரு தொகுதியில் மட்டும் நடக்கும் மோசடி அல்ல. அது, ஒட்டுமொத்த மாநிலத்திலும், தேசம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset