நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலயங்களுக்கான தர்ம மடானி திட்ட விண்ணப்பத்திற்கான காலக் கெடு நவம்பர் 19 வரை நீட்டிப்பு: மித்ரா

புத்ராஜெயா:

ஆலயங்களுக்கான தர்ம மடானி திட்ட விண்ணப்பத்திற்கான காலக் கெடு நவம்பர் 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மித்ரா எனும் மலேசிய இந்திய சமுக உருமாற்ற பிரிவு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

நாட்டில் உள்ள 1,000 ஆலயங்களுக்கு 20,000 ரிங்கிட் என மொத்தம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆலயங்களின் வாயிலாக இந்திய சமுதாயம் பயனடையும் திட்டங்களை மேற்கோள்ள இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்நிதிக்கான விண்ணப்ப காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று நவம்பர் 5ஆம் தேதி மாலை 6.00 மணி முதல் நவம்பர் 19 மாலை 6.00 மணி வரை ஆலயங்கள் இந்நிதிக்கு விண்ணப்பிக்கலாம்.

மலேசியா முழுவதும் உள்ள அனைத்து இந்து வழிபாட்டுத் தலங்களும் தர்ம மடானி திட்டத்திற்கான விண்ணப்பப் படிவம் Borang Permohonan Program Pemerkasaan Rumah Ibadat Hindu Di
Bawah Program Dharma MADAN என்ற கூகுள் படிவ இணைப்பு வழியாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

மேலும் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் முழுமையானதா, குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்கிறது என்பதை உறுதிப்படுத்த, விண்ணப்பதாரர்கள் தர்ம மடானி திட்ட விண்ணப்ப வழிகாட்டுதல்கள் Garis Panduan Permohonan Program Dharma MADANI  என்ற இணைப்பைப் சரி பார்க்கலாம்.

விண்ணப்பத் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ மித்ரா வலைத்தளம் (www.mitra.gov.my), அதிகாரப்பூர்வ மித்ரா சமூக ஊடக தளம் (முகநூல்) ஆகியவற்றிலும் காணலாம் என அந்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset