நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

பெர்மிம் பேரவையின் வீட்டிலிருந்தே வணிகம்: இணையத்தில் விரிவாக்கம் செய்யும் கருத்தரங்கு 

கோலாலம்பூர்:

பெர்மிம் பேரவையின் ஏற்பாட்டில் வீட்டிலிருந்தே வணிகத்தை இணையத்தில் விரிவாக்கம் செய்யும் கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது.

பெர்மிம் பொருளாதார, தொழில்முனைவோர் பிரிவு ஏற்பாடு செய்த From Home to Online Success எனும் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கு வீட்டிலிருந்து தங்களது தொழிலை இணையம் வழியாக விரிவாக்க செய்ய விரும்பும் தொழில்முனைவோர்களுக்கான வழிகாட்டல் அமர்வாக அது அமைந்தது.

முதல் பேச்சாளரான என். ஹம்சா மொஹிதீன் (Sinar Azam Usahaniaga Sdn. Bhd.) தயாராகப் பொதியப்பட்ட உணவுப் பொருட்களை இணைய விற்பனை செய்வது குறித்து விரிவாக விளக்கினார். 

மேலும், தமது நிறுவனத்தின் தயாரிப்புகளை பங்கேற்பாளர்களுக்கு சுவைத்து பார்க்கும் வாய்ப்பையும் வழங்கினார்.

இரண்டாவது பேச்சாளரான நூர் மிசானி அப்துல் ரஹீம் (Hajji Bakery) தமது குடும்ப பாரம்பரிய பேக்கரி தொழிலின் வளர்ச்சிப் பயணத்தை பகிர்ந்து கொண்டார். 

தொழில் வெற்றிக்கான பயனுள்ள ஆலோசனைகளையும் வழங்கியதுடன், பங்கேற்பாளர்கள் Institut Keusahawanan Negara இல் இணைந்து மேலதிக பயிற்சிகள் பெறுமாறு ஊக்குவித்தார்.

மூன்றாவது பேச்சாளரான என். அப்துல்லாஹ் மாலிக் (Infi Gadgets), Shopee, TikTok வழியாக விற்பனை அதிகரிப்பதற்கான நுணுக்கங்கள், உத்திகளை பகிர்ந்தார். 

மேலும், இணைய வணிகத்திற்கான சரியான தயாரிப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது எனவும் அவர் வழிகாட்டினார்.

நிகழ்ச்சி முழுவதும், பங்கேற்பாளர்கள் இணைய வணிக துறையில் முன்னேற தேவையான மதிப்புமிக்க தகவல்களைப் பெற்றனர்.

பெர்மிம் பொருளாதார தொழில்முனைவோர் பிரிவு சார்பில் சரினா  பேகம் பங்கேற்ற அனைத்து விருந்தினர்களுக்கும், பேச்சாளர்களுக்கும், அனுசரணையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset