நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தேசிய இறையாண்மையை அச்சுறுத்துகிறது; அன்வார் பதவி விலக வேண்டும்: துன் மகாதிர்

கோலாலம்பூர்:

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தேசிய இறையாண்மையை அச்சுறுத்துகிறது.

இதனால் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பதவி விலக வேண்டும் என துன் மகாதிர் வலியுறுத்தினார்.

மலேசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கூட்டரசு அரசியலமைப்பின் விதிகளை மீறுகிறது.
மேலும் மலாய் ஆட்சியாளர்களின் நிலைப்பாடு உட்பட நாட்டின் உரிமைகள், இறையாண்மையை அச்சுறுத்துகிறது.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமானது.

மேலும் மலேசியா அதன் சொந்தக் கொள்கைகள், முடிவுகளைத் தீர்மானிக்கும் சுதந்திரத்தின் பெரும்பகுதியை இழக்கச் செய்தது.

இந்த ஒப்பந்தம் உண்மையில் நாட்டின் சுதந்திரத்தை நீக்கியது.

ஒவ்வொரு ஆண்டும் 30 போயிங் விமானங்கள், மூன்று பில்லியன் மதிப்புள்ள எரிவாயு உட்பட அமெரிக்காவிலிருந்து 150 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எங்கள் மீது அதிக அழுத்தம் இருப்பதால், மற்ற நாடுகளுடன் ஒரு ஒப்பந்தம் செய்வதற்கு கூட முதலில் அமெரிக்காவுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா தலைமைத்துவ அறக்கட்டளையில் அரசியல் கட்சிகள்,  அரசு சாரா நிறுவனங்களுடன் அமெரிக்காவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான வட்டமேசை விவாதத்தில் கலந்து கொண்ட பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset