நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மருத்துவமனை, மருத்துவர் அலட்சியத்தால் ஏற்பட்ட நிரந்தர ஊனத்திற்காக விமல் ராஜ்க்கு 7.4 மில்லியன் ரிங்கிட் வழங்க உத்தரவு

கோலாலம்பூர்:

மருத்துவமனை, மருத்துவர் அலட்சியத்தால் ஏற்பட்ட நிரந்தர ஊனத்திற்காக விமல் ராஜ்க்கு 7.4 மில்லியன் ரிங்கிட் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது

அரசு மருத்துவமனை, அதன் பல மருத்துவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அலட்சியம் வழக்கில், உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.

கடந்த 2019ஆம் ஆண்டு பல அறுவை சிகிச்சைகள் மூலம் இடது கை முழங்கைக்குக் கீழே, வலது கால் முழங்காலுக்குக் கீழே, இடது குதிகால், கால் விரல்கள் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து நிரந்தரமாக ஊனமுற்ற 22 வயதான கே. விமல் ராஜ் இந்த வழக்கைத் தாக்கல் செய்தார்.

அரசாங்க தரப்பு பொறுப்பை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, சேதங்களை மதிப்பிட்ட பிறகு, சேதங்கள் கணக்கிடப்படும் என்று நீதிபதி சு டியாங் ஜூ தனது தீர்ப்பில் கூறினார்.

இழப்பீட்டு மதிப்பீட்டு நடவடிக்கைகளில், வாதிகளான விமல் மற்றும் அவரது தந்தை ஜே. கிருஷ்ணசாமி ஆகியோர் 11 நிபுணர் சாட்சிகளை முன்வைத்தனர்.

அதே நேரத்தில் அரசாங்கத்தால் நான்கு சாட்சிகள் வழங்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset