செய்திகள் மலேசியா
பாதுகாவலரின் மரணம் கொலையாக வகைப்படுத்தப்பட்டது; குற்றவாளி விரைவில் தண்டிக்கப்படுவார்: டத்தோ முருகையா நம்பிக்கை
கோலாலம்பூர்:
அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலரின் மரணம் தற்போது கொலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் குற்றவாளி விரைவில் தண்டிக்கப்படுவார் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோ முருகையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 13ஆம் தேதி மெனாரா மெகா காண்டோமினியத்தில் தன்னுடன் வருமாறு குடியிருப்பாளர் ஒருவர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க மறுத்ததால் ஆர். சந்திரன் தாக்கப்பட்டார்.
இதனால் பாதிக்கப்பட்ட அவர் போலிசில் புகார் அளித்தார்.
அவர் தாக்கப்பட்டதாகவும், சந்தேக நபர் துப்பாக்கி போன்ற ஒரு பொருளைத் தன்னை நோக்கி காட்டியதாகவும் அவர் புகாரில் கூறினார்.
பின்னர் அவர் மருத்துவ சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.
இருப்பினும், சிறிது நேரத்திலேயே அவர் இறந்து விட்டார்.
மரணமடைந்த சந்திரனுக்கு உரிய நீதி வேண்டும். குறிப்பாக குற்றவாளி தண்டனையில் இருந்து தப்பிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக இவ்விவகாரத்தை உள்துறை அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் சந்திரனின் மரணம் கொலையாக வகைப்படுத்தப்பட்டது என செந்தூல் மாவட்ட போலிஸ் தலைவர் அஹ்மத் சுகார்னோ இன்று கூறியுள்ளார்.
இதன் மூலம் சந்திரனின் மரணத்திற்கு உரிய நீதி கிடைத்துள்ளது.
அதே வேளையில் குற்றவாளிக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
மேலும் இவ்விவகாரத்தில் துரிதமாக செயல்படும் போலிஸ்படைக்கும் எனது வாழ்த்துகள் என டத்தோ முருகையா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 3, 2025, 10:11 pm
அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தேசிய இறையாண்மையை அச்சுறுத்துகிறது; அன்வார் பதவி விலக வேண்டும்: துன் மகாதிர்
November 3, 2025, 10:09 pm
சிகாமட்டில் 2.7 ரிக்டர் அளவில் பலவீனமான நிலநடுக்கம் பதிவானது
November 3, 2025, 10:02 pm
அம்பாங் வழியில் ரயில் தீப்பிடித்து எரிந்ததாகக் கூறும் வைரல் வீடியோவை பிரசரனா மறுத்தது
November 3, 2025, 4:12 pm
சூடானில் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: பிரதமர்
November 3, 2025, 2:36 pm
அக்டோபர் 31 வரை 13 மில்லியனுக்கும் அதிகமானோர் பூடி ரோன் 95 சலுகைகளை பயன்படுத்தியுள்ளனர்
November 3, 2025, 2:35 pm
1,000 ஆலயங்களுக்கு 20 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கிய மடானி அரசாங்கத்திற்கு பாராட்டு: குணராஜ்
November 3, 2025, 2:34 pm
