நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிகாமட்டில் 2.7 ரிக்டர் அளவில் பலவீனமான நிலநடுக்கம் பதிவானது

சிகாமட்:

ஜொகூர் சிகாமட்டில் 2.7 ரிக்டர் அளவில் பலவீனமான நிலநடுக்கம் பதிவானது.

சிகாமட்டில் உள்ள ஜெமெந்தாவில் நேற் இரவு 7.55 மணிக்கு இந்த நிலநடுக்கம் கண்டறியப்பட்டது.

மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (மெட் மலேசியா) படி,

நிலநடுக்கம் 2.5 டிகிரி வடக்கு, 102.8 டிகிரி கிழக்கில் மையம் கொண்டிருந்தது.
இது சிகாமட்டில் இருந்து மேற்கே சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ளது.

சிகாமட், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் https://forms.gle/1cWc2YD8DgWpbDJP7 என்ற முகவரியில் ஒரு கேள்வித்தாளை நிரப்புமாறு மெட்மலேசியா ஒரு முகநூல் பதிவில் கேட்டுக் கொண்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset