நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூரில் இருந்து 4,343 பேர் வருகை: மலேசியாவில் இருந்து சென்றவர்கள் 2,771 பேர்

ஜோகூர்:

தரைவழி தடுப்பூசி பயணத்தடத் திட்டத்தின் கீழ் கடந்த ஐந்து நாள்களில் மட்டும் சிங்கப்பூரில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மலேசியா வந்தடைந்துள்ளனர்.

இதைவிட மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் சென்றவர்களின் எண்ணிக்கை குறைவு எனத் தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் மலேசியா, சிங்கப்பூர் இடையேயான பயணத்துக்கு ஏதுவாக வான் மற்றும் தரைவழி எல்லைகள் திறக்கப்பட்டன.

இதையடுத்து ஏராளமானோர் பிரிந்திருக்கும் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்களைக் காண எல்லைகளைக் கடக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Singapore-Malaysia land VTL may be opened up to general travellers from  mid-December: PM Lee - TODAY

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் வரையிலான நிலவரப்படி சிங்கப்பூரில் இருந்து தரைவழி 4,343 பேர் எல்லை கடந்து மலேசியாவுக்குள் வந்துள்ளர்.

இரு தரப்புக்கும் இடையேயான பயணத்தடத் திட்ட ஒப்பந்தத்தின்கீழ் தினந்தோறும் மொத்தம் 2,880 பேர் தரைவழி மலேசியா - சிங்கப்பூர் இடையே எல்லை கடக்க அனுமதிக்கப்படுவர்.

அந்த வகையில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் 4,343 என்பது சுமார் 60 விழுக்காடு ஆகும். இதேபோல் பயணத்தடத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் இருந்து 2,771 பேர் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.

தொற்றுப் பாதிப்புக்கு முன்பு நாள்தோறும் சுமார் மூன்று லட்சம் மலேசியர்கள் சிங்கப்பூர் சென்று திரும்புவர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset