செய்திகள் மலேசியா
செராஸ் ஜெயாவில் பெரும் தீ விபத்து: நான்கு தொழிற்சாலைகள் பாதிப்பு
செராஸ்:
பலாக்கோங் அருகிலுள்ள தாமான் செராஸ் ஜெயா பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு தொழிற்சாலைகள் கடுமையாக சேதமடைந்தன.
சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்பு துறையின் செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் அஹமத் முக்லிஸ் முக்தார் தெரிவித்ததாவது, சம்பவம் குறித்து இரவு 9.24 மணிக்கு தகவல் கிடைத்ததாக கூறினார்.
அதனைத் தொடர்ந்து பண்டார் துண் ஹுசைன் ஒன் தீயணைப்பு நிலையத்திலிருந்து வாகனங்களும் வீரர்களும் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த தீ விபத்தில் நான்கு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று முழுமையாக எரிந்ததுடன், மற்றவை முறையே 50 விழுக்காடு முதல் 90 விழுக்காடு வரையில் சேதமடைந்தன. தீ பரவாமல் இரவு 10.18 மணிக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தற்போது மூன்று தொழிற்சாலைகளில் தீ அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் சம்பவ இடத்தை கண்காணிக்க வான்காணி கருவி பிரிவும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் பல தீயணைப்பு நிலையங்களும் தன்னார்வ தீயணைப்பு குழுவும் காவல்துறையும் இணைந்து செயல்பட்டன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 15, 2026, 12:34 pm
மெரிடிம் மேம்பாடு திட்டம்: கடல் கண்காணிப்பு திறன் 70% உயர்வு
March 15, 2026, 12:31 pm
“உணவு பாதுகாப்பு சிக்கலுக்கு தனிப்பட்ட தோட்டம் தீர்வல்ல”: டத்தோ வான் சைபுல் விளக்கம்
March 15, 2026, 12:22 pm
ஸ்தாப்பாக்கில் அதிகாலை கொள்ளை: ஆயுதத்துடன் வந்த இருவர் பணம் பறிப்பு
March 15, 2026, 11:37 am
நாடெங்கும் உள்ள பி40 பிரிவினருக்கு 16,500 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகம்: டத்தோஶ்ரீ ரமணன்
March 15, 2026, 10:56 am
டிரெய்லர், மூன்று வாகனங்கள் உட்படுத்திய விபத்தில் 12 பேர் பாதிப்பு; 9 கி.மீ வரை போக்குவரத்து நெரிசல்
March 15, 2026, 10:38 am
மூடா கட்சியின் புதிய தலைவராக அமிரா ஐஸ்யா அப்துல் அஜீஸ் பொறுப்பேற்பு
March 14, 2026, 8:09 pm
