செய்திகள் மலேசியா
டிரெய்லர், மூன்று வாகனங்கள் உட்படுத்திய விபத்தில் 12 பேர் பாதிப்பு; 9 கி.மீ வரை போக்குவரத்து நெரிசல்
புக்கிட் மெர்தாஜாம்:
டிரெய்லர், மூன்று வாகனங்கள் உட்படுத்திய விபத்தில் கிட்டத்தட்ட 12 பேர் பாதிக்கப்பட்டனர்.
ஜூரு, பெர்மாத்தாங் பாவ் அருகே வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் கிலோமீட்டர் 137.4 இல் நேற்று மாலை இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தைத் தொடர்ந்து ஒன்பது கிலோமீட்டர் வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பினாங்கு தீயணைப்பு, மீட்புத் துறையின் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் கூறுகையில்,
இந்த சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 12 பேர் பாதிக்கப்பட்டனர்.
பலர் காயமடைந்த வேளையில் அவர்களில் சிலர் படுகாயமடைந்தாக கூறினார்.
பிற்பகல் 3.12 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்தது.
உடனே பின்னர் பிறை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து இரண்டு இயந்திரங்களுடன் எட்டு பேர் கொண்ட குழு மீட்புப் பணிகளை மேற்கொள்ள சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
இந்த விபத்தில் ஹூண்டாய் எலன்ட்ரா, புரோட்டான் எக்ஸ்70, ஹோண்டா பிஆர்வி ஆகிய மூன்று கார்களும், பல்பொருள் அங்காடி பொருட்களை ஏற்றிச் செல்லும் டிரெய்லரும் ஈடுபட்டன.
இரண்டு பேர் சிக்கியிருப்பதைக் கண்டறிந்து, தீயணைப்புத் துறை சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே பொதுமக்களால் வெளியேற்றப்பட்டனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 15, 2026, 12:34 pm
மெரிடிம் மேம்பாடு திட்டம்: கடல் கண்காணிப்பு திறன் 70% உயர்வு
March 15, 2026, 12:31 pm
“உணவு பாதுகாப்பு சிக்கலுக்கு தனிப்பட்ட தோட்டம் தீர்வல்ல”: டத்தோ வான் சைபுல் விளக்கம்
March 15, 2026, 12:22 pm
ஸ்தாப்பாக்கில் அதிகாலை கொள்ளை: ஆயுதத்துடன் வந்த இருவர் பணம் பறிப்பு
March 15, 2026, 11:37 am
நாடெங்கும் உள்ள பி40 பிரிவினருக்கு 16,500 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகம்: டத்தோஶ்ரீ ரமணன்
March 15, 2026, 10:38 am
மூடா கட்சியின் புதிய தலைவராக அமிரா ஐஸ்யா அப்துல் அஜீஸ் பொறுப்பேற்பு
March 15, 2026, 10:23 am
செராஸ் ஜெயாவில் பெரும் தீ விபத்து: நான்கு தொழிற்சாலைகள் பாதிப்பு
March 14, 2026, 8:09 pm
