நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்தாப்பாக்கில் அதிகாலை கொள்ளை: ஆயுதத்துடன் வந்த இருவர் பணம் பறிப்பு

கோலாலம்பூர்: 

ஸ்தாப்பாக் தேசா பகுதியில் உள்ள ஒரு பொது விற்பனைக்கடையில் பணிபுரிந்த 24 வயதுடைய மேற்பார்வையாளர், ஆயுதத்துடன் வந்த இருவரால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இடம்பெற்றது.

வாங்சா மாஜு மாவட்ட காவல் துறைத் தலைவர் முஹம்மத் லாசிம் இஸ்மாயில் தெரிவித்ததாவது, சம்பவம் குறித்து காலை 4.43 மணியளவில் புகார் கிடைத்தது. அதற்கு முன்பு அதிகாலை 1.59 மணியளவில் கடையில் பணியில் இருந்தபோது, கருப்பு முகமூடியும், தலைக்கவசமும் அணிந்த இருவர் கடைக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அரிவாளால் மிரட்டிய அவர்கள், பணத்தை ஒப்படைக்குமாறு கேட்டனர். அச்சமடைந்த பணியாளர் 2,467.50 ரிங்கிட் பணத்தை வழங்கியதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்தில் இருந்த மற்றொரு ஊழியரின் கைப்பேசியும், பாதிக்கப்பட்டவரின் கைப்பேசியும் கொள்ளையடிக்கப்பட்டன. 

மொத்த இழப்பு சுமார் 6,067.50 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் இருவரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset