செய்திகள் மலேசியா
“உணவு பாதுகாப்பு சிக்கலுக்கு தனிப்பட்ட தோட்டம் தீர்வல்ல”: டத்தோ வான் சைபுல் விளக்கம்
ஷா ஆலம்:
வேளாண்மை, உணவு பாதுகாப்பு அமைச்சின் பணியாளர்கள் தங்களது வீடுகளில் காய்கறி பயிரிட வேண்டும் என்ற பரிந்துரை, நாட்டின் உணவு பாதுகாப்பு பிரச்சினைக்கு தீர்வாக இருக்க முடியாது என தாசெக் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைபுல் வான் ஜான் தெரிவித்தார்.
மக்களை தோட்டப்பணியில் ஈடுபட ஊக்குவிப்பது நல்ல முயற்சி என்றாலும், உலகளாவிய உணவுப் பொருள் வழங்கலில் நிலவும் அசாதாரண நிலையை சமாளிக்க இது ஒரு முக்கிய தீர்வாக இருக்காது என அவர் கூறினார்.
நாடு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான ரிங்கிட் மதிப்பிலான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதையே இன்னும் சார்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வீட்டுத் தோட்டங்களில் சிறிய அளவில் பயிரிடுவது தனிப்பட்ட பயன்பாட்டுக்கு உதவலாம். ஆனால் அது நாட்டின் மொத்த உணவுப் பொருள் வழங்கலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.
பழைய “பச்சை புத்தக இயக்கம்” போன்ற முயற்சிகளை மீண்டும் முன்னிறுத்துவது மட்டும் போதுமானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் உணவு துறையில் குறைந்த உற்பத்தித் திறன், வேளாண்மை நிலங்கள் குறைதல், அதிகரிக்கும் உற்பத்திச் செலவுகள், விநியோக சங்கிலியில் உள்ள பலவீனங்கள் போன்றவை முக்கிய சவால்களாக உள்ளன.
எனவே, வேளாண்மை உற்பத்தியை உயர்த்துதல், விநியோக அமைப்பை வலுப்படுத்துதல், நவீன தொழில்நுட்பங்களை விரிவாக பயன்படுத்துதல் போன்ற முழுமையான கொள்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என வான் சைபுல் வலியுறுத்தினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 15, 2026, 1:43 pm
தெக்குன் திட்டங்கள் இந்திய தொழில் முனைவர்களை முழுமையாக சென்றடைய வேண்டும்: மோகன் ராஜ், சரஸ்வதி
March 15, 2026, 12:34 pm
மெரிடிம் மேம்பாடு திட்டம்: கடல் கண்காணிப்பு திறன் 70% உயர்வு
March 15, 2026, 12:22 pm
ஸ்தாப்பாக்கில் அதிகாலை கொள்ளை: ஆயுதத்துடன் வந்த இருவர் பணம் பறிப்பு
March 15, 2026, 11:37 am
நாடெங்கும் உள்ள பி40 பிரிவினருக்கு 16,500 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகம்: டத்தோஶ்ரீ ரமணன்
March 15, 2026, 10:56 am
டிரெய்லர், மூன்று வாகனங்கள் உட்படுத்திய விபத்தில் 12 பேர் பாதிப்பு; 9 கி.மீ வரை போக்குவரத்து நெரிசல்
March 15, 2026, 10:38 am
மூடா கட்சியின் புதிய தலைவராக அமிரா ஐஸ்யா அப்துல் அஜீஸ் பொறுப்பேற்பு
March 15, 2026, 10:23 am
