நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூடா கட்சியின் புதிய தலைவராக அமிரா ஐஸ்யா அப்துல் அஜீஸ் பொறுப்பேற்பு

பெட்டாலிங் ஜெயா: 

மூடா கட்சியின் முதல் உள்தேர்தலில், அமிரா ஐஸ்யா அப்துல் அஜீஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிக்கான போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருந்தாலும், பின்னர் உறுப்பினர்களின் முடிவின் மூலம் அவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

புத்திரி வாங்சா சட்டமன்ற உறுப்பினரான அமிரா 103 வாக்குகள் பெற்றார். லெபென் சித்தார்த் 110 வாக்குகளுடன் முதல் இடத்திலும், சையிதா இஸ்ஸாட்டி நூர் 104 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும் இருந்தனர்.

மூடா கட்சியின் தேர்தல் முறையின் படி, அதிக வாக்குகள் பெற்ற முதல் 25 பேர் மத்திய நிர்வாகக்குழுவில் தேர்வு செய்யப்படுகின்றனர். 

பின்னர் அவர்கள் தங்களுக்குள் தலைமைப் பதவிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதற்கு முன்பு இடைக்கால தலைவராக இருந்த அமிரா, இந்தத் தேர்தலின் மூலம் அதிகாரப்பூர்வமாக தலைவராக பொறுப்பேற்றார்.

சுமார் 125 பிரதிநிதிகள் பங்கேற்ற இந்தத் தேர்தலுக்குப் பிறகு, 2026 முதல் 2029 வரையிலான புதிய தலைமை அணியையும் அமிரா அறிவித்தார். 

இது கட்சியினரிடமிருந்து கிடைத்த பெரிய பொறுப்பு என அமிரா தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset