செய்திகள் மலேசியா
தெக்குன் திட்டங்கள் இந்திய தொழில் முனைவர்களை முழுமையாக சென்றடைய வேண்டும்: மோகன் ராஜ், சரஸ்வதி
அம்பாங்:
தெக்குன் திட்டங்கள் முழுமையாக இந்திய தொழில் முனைவர்களை சென்றடைய வேண்டும்.
ஒருங்கிணைப்பாளர்களான மோகன் ராஜ், சிலாங்கூர் மாநில இந்திய சமூக தலைவர் கே. சரஸ்வதி தேவி ஆகியோர் இவ்வாறு கூறினர்.
தொழில் துறைகளில் இந்திய இளைஞர்கள் மிகச் சிறந்த முன்னேற்றம் அடைவதை உறுதி செய்யும் நோக்கத்தில் சிறப்பு விளக்கக் கூட்டம் இன்று நடத்தப்பட்டது.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இந்திய தொழில் முனைவர்களை இலக்காக கொண்டு இது நடத்தப்பட்டது.
தொழில் முனைவர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சர் ஸ்டீவன் சிம் ஆதரவில் இக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக்கு குழு உறுப்பினரும் பந்திங் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வி.பாப்பாராயுடு தனது ஆதரவை தெரிவித்தார்.
லெம்பா ஜெயா சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சைட் அகமட், தெராத்தாய் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இயூ ஜியா, அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக துணத் தலைவர் ஹாஜி ஹஸ்ரோல்னிஸாம் ஆகியோரும் கலந்து கொண்டர்.
இந்நிகழ்ச்சியில் ஈபிஎப், சொக்சோ, ஆர்.எச்.பி வங்கி, மை-சலாம் உள்ளிட்ட இதர ஏஜென்சிகளும் பங்கு கொண்டனர்.
தொழில் துறைகளில் எதிர்நோக்கும் சவால்கள், வர்த்தக மேம்பாடுகள் மற்றும் நிதி தொடர்பான பிரச்சினைகள் ஆகியவற்றை எப்படி சமாளிப்பது என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
குறிப்பாக தெக்குன் திட்டங்கள் இந்திய தொழில் முனைவர்களை
முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் விளக்கங்களும் வழங்கப்பட்டது.
இக்கூட்டம் பங்கேற்பாளர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும் என்று மோகன் ராஜ், சரஸ்வதி தேவி ஆகியோர் நம்பிக்கை தெரிவித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 15, 2026, 12:34 pm
மெரிடிம் மேம்பாடு திட்டம்: கடல் கண்காணிப்பு திறன் 70% உயர்வு
March 15, 2026, 12:31 pm
“உணவு பாதுகாப்பு சிக்கலுக்கு தனிப்பட்ட தோட்டம் தீர்வல்ல”: டத்தோ வான் சைபுல் விளக்கம்
March 15, 2026, 12:22 pm
ஸ்தாப்பாக்கில் அதிகாலை கொள்ளை: ஆயுதத்துடன் வந்த இருவர் பணம் பறிப்பு
March 15, 2026, 11:37 am
நாடெங்கும் உள்ள பி40 பிரிவினருக்கு 16,500 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகம்: டத்தோஶ்ரீ ரமணன்
March 15, 2026, 10:56 am
டிரெய்லர், மூன்று வாகனங்கள் உட்படுத்திய விபத்தில் 12 பேர் பாதிப்பு; 9 கி.மீ வரை போக்குவரத்து நெரிசல்
March 15, 2026, 10:38 am
மூடா கட்சியின் புதிய தலைவராக அமிரா ஐஸ்யா அப்துல் அஜீஸ் பொறுப்பேற்பு
March 15, 2026, 10:23 am
