நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடெங்கும் உள்ள பி40 பிரிவினருக்கு 16,500 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகம்: டத்தோஶ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

தற்போதைய பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு ஆரம்பகட்ட நடவடிக்கையாக, நாடு முழுவதும் உள்ள பி40 பிரிவினருக்கு 16,500 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் விநியோகிக்கப்படுகிது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் இதனை தெரிவித்தார்.

மனிதவள அமைச்சின் இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 100,000 மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உணவுப் பொட்டலங்கள் அந்தந்த நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள கிராமத் தலைவர்கள், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள் மூலம் தகுதியானவர்களுக்குக் கொண்டு சேர்க்கப்படும். 

ஏனெனில், தங்கள் பகுதிகளில் உள்ள பி40 பிரிவினர் யார் என்பது அவர்களுக்கு மட்டுமே துல்லியமாகத் தெரியும்.

இந்தத் திட்டமானது சமூகப் பாதுகாப்பு அமைப்பு, மனிதவள மேம்பாட்டுக் கழகம், தேலண்ட் கோர்ப், திறன் மேம்பாட்டு நிதி நிறுவனம், தேசிய தொழில் பாதுகாப்பு, சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கடுமையான வறுமை விகிதம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 0.09 சதவீதமாகக் குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகிறது.

மேலும், இந்த ஆண்டு நோன்புப் பெருநாள் பொது உபசரிப்புகளை தவிர்க்க அரசாங்கம் எடுத்த முடிவு ஒரு சிறந்த சிக்கன நடவடிக்கை என்று அவர் வலியுறுத்தினார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலையும் உலகப் பொருளாதார நிலையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 

தற்போது நமது நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருந்தாலும், நாம் நிதியை வீணாக்கக் கூடாது. 

தனிப்பட்ட முறையில் நண்பர்கள், குடும்பத்தினருக்கு விருந்து அளிப்பதில் தவறில்லை. ஆனால், ஆயிரக்கணக்கானோருக்கு சமைத்து உணவை வீணாக்குவது ஆடம்பரமானது என்று அவர் கூறினார்.

கடந்த மார்ச் 11-ஆம் தேதி, உலகப் பொருளாதார நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு அனைத்து அமைச்சகங்கள், ஏஜென்சிகள், அரசு சார்ந்த நிறுவனங்கள் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்புகளை நடத்த வேண்டாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset