நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெரிடிம் மேம்பாடு திட்டம்: கடல் கண்காணிப்பு திறன் 70% உயர்வு

புத்ராஜெயா: 

மலேசிய கடல்சார் அமலாக்க அமைப்பின் கப்பல்கள், படகுகளுக்கான பராமரிப்பு, மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், அந்த அமைப்பின் செயல்திறன் சுமார் 70 விழுக்காடு வரை அதிகரிக்கும் என அதன் தலைமை இயக்குநர் டத்தோ முஹம்மத் ரொஸ்லி அப்துல்லா தெரிவித்தார்.

படிப்படியாக மேற்கொள்ளப்படும் சேவை ஆயுள் நீட்டிப்பு திட்டம், மறுசீரமைப்பு, இயந்திர மாற்று திட்டங்கள் மூலம் பழைய கப்பல்கள், படகுகளின் சேவை காலம் மேலும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படுகின்றன. 

தற்போது அந்த அமைப்பில் 72 கப்பல்களும் 167 படகுகளும் செயல்பட்டு, 556,285 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட மலேசிய கடல் மண்டலத்தை கண்காணித்து வருகின்றன.

மேலும் மேற்கு கரை, கிழக்கு கரை, சபா மற்றும் சரவாக் பகுதிகளில் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் விமான ஆதரவு வசதிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இந்த ஆண்டில் அந்த அமைப்புக்கு மொத்தமாக 2.29 பில்லியன் ரிங்கிட் நிதி வழங்கப்பட்டதில், 300 மில்லியன் ரிங்கிட் கப்பல் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பழைய உபகரணங்கள் சந்தையில் கிடைக்காததால் அவற்றை மாற்றி புதியவை பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. 

இதன் மூலம் கப்பல்களின் ஆயுள் நீடிப்பதுடன், புதிய கப்பல்களை வாங்குவதைக் காட்டிலும் குறைந்த செலவில் கடல் பாதுகாப்புத் திறனை மேம்படுத்த முடியும் என முகமது ரொஸ்லி கூறினார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset