நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

Indigo விமானத்தில் வெடிகுண்டுப்புரளி: சந்தேக நபர் தேடப்படுகிறார்

மும்பை:

சவூதி அரேபியாவின் ஜித்தா (Jeddah) நகரிலிருந்து இந்தியாவின் ஹைதராபாத்துக்கு (Hyderabad) புறப்பட்ட Indigo விமானம் வெடிகுண்டு மிரட்டலால் மும்பையில் தரையிறக்கப்பட்டது.

நேற்று காலை அந்தச் சம்பவம் நடந்துள்ளது.

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ராஜீவ் காந்தி அனைத்துலக விமான நிலையத்திற்குத் தகவல் வந்தது.

அடையாளம் தெரியாத நபர் மின்னஞ்சல் வழி அந்தத் தகவலை அனுப்பியிருக்கிறார்.

"ஹைதராபாத்தில் Indigo-68 விமானத்தைத் தரையிறக்க வேண்டாம். விமானத்தில் இருக்கும் சிலர் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்." என்று அந்த நபர் எச்சரித்தார்.

தகவலை அறிந்தவுடன் விமானம் காலை 8.12 மணிக்கு மும்பையின் சிவாஜி அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

வெடிகுண்டுகளை அகற்றும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் விமானத்தை அலசி ஆராய்ந்தனர்.

வெடிகுண்டோ அது தொடர்பான எந்தப் பொருளோ கண்டுபிடிக்கப்படவில்லை.

எந்த ஆபத்தும் இல்லை என்று உறுதிசெய்த பிறகு விமானம் ஹைதராபாத்தை மாலை 4.10 மணிக்குச் சென்றடைந்தது.

பொய்யான தகவலைக் கொடுத்த நபர் தேடப்படுகிறார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset