நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் மரணம்

கோதாவரி:

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஒரு கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பேர் மாண்டனர்.

ஸ்ரீகுளம் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலில் நேற்று காலை அசம்பாவிதம் நடந்தது.

ஏகாதசி நிகழ்வுக்காகக் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் கூடியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல் ஏற்பட்டது.

காயமுற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேச ஆளுநர் அப்துல் நஸீர் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார்.

மாண்டோரின் குடும்பத்தாருக்குப் பிரதமர் நரேந்திர மோடி அனுதாபம் தெரிவித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset