நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் மேலும் ஒரு பயணிக்கு ஓமிக்ரான் தொற்று: சுகாதாரத்துறை அறிவிப்பு 

சிங்கப்பூர்:

சிங்கப்பூருக்கு வெளிநாட்டிலிருந்து வந்த மேலும் ஒருவருக்கு ஓமிக்ரான் (Omicron) கிருமித் தொற்றியிருப்பதாக முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

அது குறித்து சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஆடவர், இம்மாதம் முதல் தேதி தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த 37 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி.

கடந்த வாரம் ஓமிக்ரான் வகை கிருமி அடையாளம் காணப்பட்ட இருவருடன் அதே விமானத்தில் அவர் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.

ஜோஹன்னஸ்பர்கிலிருந்து (Johannesburg) கடந்த மாதம் 29ஆம் தேதி புறப்பட்டபோது அவருக்குக் கிருமித்தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது.

சிங்கப்பூர் வந்தவுடன் இருமுறை மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளிலும் கிருமித்தொற்று இல்லை என்று உறுதியானது.

இருப்பினும் இம்மாதம் 4ஆம் தேதி ஆடவருக்குக் காய்ச்சலும் தொண்டை வலியும் ஏற்பட்டதால், அவர் தேசியத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் அவருக்கு ஓமிக்ரான் கிருமி தொற்றியிருப்பது தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட ஆடவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர் ஆவார்.

அவருக்கு மிதமான அறிகுறிகளே இருப்பதாக அமைச்சு தெரிவித்தது.

பாதிக்கப்பட்டவர் சமூக அளவில் யாரிடமும் தொடர்பில் இல்லை என்றும் அது சொன்னது.

- CNA

தொடர்புடைய செய்திகள்

+ - reset