செய்திகள் உலகம்
வங்கதேச நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கும் ‘பிஎன்பி’ - தாரிக் ரஹ்மான் பிரதமராகிறார்
டாக்கா:
வங்கதேச நாடாளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில், 59.44 சதவீத வாக்குகள் பதிவாகின. இதையடுத்து, வாக்கு எண்ணும் பணி தொடங்கப்பட்டது.
மொத்தமுள்ள 299 இடங்களில், வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) தலைமையிலான கூட்டணி 212 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
ஜமாத் இ இஸ்லாமி தலைமையிலான கூட்டணி 70 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிஎன்பி 181 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும், ஜமாத் இ இஸ்லாமி 61 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும் அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள், டாக்காவில் உள்ள பிஎன்பி தலைமையகத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 15, 2026, 5:28 pm
இந்தோனேசியாவின் ப்ளோரஸ் தீவில் பயங்கர நிலநடுக்கம்: மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
August 15, 2026, 11:11 am
ஹோர்முஸ் நீரினையை விரைவில் அமெரிக்கா பிராந்தியமாக அறிவிப்பேன்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
August 15, 2026, 10:49 am
இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
August 14, 2026, 5:33 pm
ஆஸ்திரேலியாவில் 3 முறை விமானங்கள் மோதல் சம்பவங்கள்: பிரதமர் ஆன்ட்டனி ஆல்பனீசி விசாரணைக்கு உத்தரவு
August 13, 2026, 5:25 pm
தாய்லாந்து சந்தையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, அறுவர் காயம்
August 13, 2026, 11:11 am
டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்து: இரு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி
August 13, 2026, 11:04 am
வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் பதவியிலிருந்து கரோலின் லீவிட் விலகுகிறார்
August 11, 2026, 11:11 am
வெனிசுவேலாவில் நிகழ்ந்த இரட்டை நிலநடுக்கங்கள்: பலி எண்ணிக்கை 6,301ஆக உயர்வு
August 10, 2026, 3:37 pm
