செய்திகள் உலகம்
அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி வன்முறைகள்: பல்கலைக்கழகத்தில் இருவர் உயிரிழப்பு
வாஷிங்டன்:
தென் கரோலினா மாநில பல்கலைக்கழகதில், மாணவர் விடுதி வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஹ்யூஜின் சூட்ஸ் மாணவர் தங்குமிடத்தில் வியாழக்கிழமை இரவு சுமார் 9.15 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து வளாகம் முழுவதும் அவசர முடக்கம் அமல்படுத்தப்பட்டது. உயிரிழந்தவர்களின் அடையாளத்தையும், காயமடைந்தவரின் நிலையைக் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
கடந்த அக்டோபரில் இதே வளாகத்தில் நடைபெற்ற இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்குப் பின்னர் மீண்டும் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமைக்கான வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகள், சுற்றுவட்டாரத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3,000 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பல்கலைக்கழகம், அமெரிக்காவில் கறுப்பின மக்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வி நிறுவனமாகக் கருதப்படுகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 13, 2026, 1:19 pm
இஸ்தான்புலில் இரட்டை கொலை அதிர்ச்சி: விமான நிலையத்தில் இரு சந்தேகநபர்கள் கைதாகினர்
February 13, 2026, 1:17 pm
சீன மீன்பிடி படகு பறிமுதல்: ஜப்பான் நடவடிக்கைக்கு சீனா கடும் அதிர்ச்சி
February 13, 2026, 12:28 pm
காதல் முறிவின் கோபம்: தீ வைத்து கொளுத்திய முன்னாள் மனைவியின் வீடு
February 12, 2026, 9:06 pm
சூடானில் 30 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 21 பேர் பலியாகினர்
February 12, 2026, 3:25 pm
போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிங்கப்பூரில் மீண்டும் ஒரு மலேசியர் தூக்கிலிடப்பட்டுள்ளார்
February 12, 2026, 2:41 pm
வைரல் வீடியோவிற்காக நஞ்சு நண்டைச் சாப்பிட்ட பிலிப்பைன்ஸ் பெண் சமூக ஊடகர் பலி
February 12, 2026, 11:04 am
கெசானி சூறாவளி கொடூரம்: மடகாஸ்கரில் 2.5 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
February 11, 2026, 12:22 pm
பள்ளி, வீட்டை இலக்காகக் கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி
February 11, 2026, 11:39 am
