நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்தான்புலில் இரட்டை கொலை அதிர்ச்சி: விமான நிலையத்தில் இரு சந்தேகநபர்கள் கைதாகினர்

இஸ்தான்புல்:

உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் துருக்கியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி 24ஆம் தேதி, 37 வயதான ஒருபெண்ணின் தலையும், கால்களும் துண்டிக்கப்பட்ட உடல் சிஸ்லி பகுதியின் குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது. 

தொடர்ந்து நடந்த விசாரணையில், 32 வயதான மற்றொரு உஸ்பெக்கிஸ்தான் பெண்ணும் இதே முறையில் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கண்காணிப்பு கேமராவில் உள்ள காட்சிகளின் அடிப்படையில், நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற இரு உஸ்பெக்கிஸ்தான்  ஆண்கள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். 

இருவரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இந்த சம்பவம் இஸ்தான்புல்லிலும், அங்காரா நகரங்களிலும் பெண்களது உரிமை போராட்டங்களுக்கு வழிவகுத்தது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset