செய்திகள் உலகம்
$6 மில்லியன் மோசடி: 231 பேரிடம் சிங்கப்பூர் போலிசார் விசாரணை
சிங்கப்பூர்:
மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 231 பேரிடம் சிங்கப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
அவர்களில் 66 பேர் பெண்கள். 165 பேர் ஆண்கள். அவர்கள் 14 வயதுக்கும் 84 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
கடந்த மாதம் 30ஆம் தேதிக்கும் இம்மாதம் 12ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர்.
231 பேரும் 900க்கும் அதிகமான மோசடிகளுக்கு உடந்தையாக இருந்ததாக அதிகாரிகள் சந்தேகித்தனர்.
அவற்றில் இணையவர்த்தக மோசடிகள், ஆள்மாறாட்ட மோசடிகள், வேலை மோசடிகள், வாடகை மோசடிகள் போன்றவை அடங்கும்.
மொத்தம் 6.35 மில்லியன் வெள்ளி ஏமாற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
ஏமாற்றியது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது, உரிமமின்றிக் கட்டணச் சேவை வழங்கியது போன்ற குற்றங்களுக்காகச் சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.
குற்றவியல் சட்டப் பிரிவு 420இன் கீழ் மற்றவர்களை ஏமாற்றும் குற்றத்துக்கு 10 ஆண்டு வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
ஆதாரம்: Media corp
தொடர்புடைய செய்திகள்
September 21, 2026, 10:41 pm
போரை நிறுத்த அமெரிக்காவுக்கு 7 நிபந்தனைகளை விதித்த ஈரான்
September 21, 2026, 3:31 pm
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மீது ஹௌதி போராட்டவாதிகள் வான்வழி தாக்குதல்
September 20, 2026, 7:36 pm
விமானத்தில் சட்டையைக் கிழித்துச் சண்டை
September 19, 2026, 11:33 am
சவூதி அரேபியாவின் ரியாத்தில் பலத்த வெடி சத்தம்: வான்வழி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
September 19, 2026, 11:17 am
கிரீன்லாந்து பாதுகாப்பினை உறுதிப்படுத்த்அ அமெரிக்கா -டென்மார்க் இடையே ஒப்பந்தம்: டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
September 16, 2026, 10:43 pm
வானிலிருந்து செய்திக்காக படம் பிடித்துக் கொண்டிருந்த NBC செய்தி நிறுவன ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: மூவர் மரணம்
September 15, 2026, 10:30 pm
சிங்கப்பூரில் 10,000க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப்களில் ஊடுருவி SMS அனுப்பிய ஆடவருக்குச் சிறை
September 15, 2026, 10:22 pm
ஏமன் உள்நாட்டுப் பூசல்: வாழ வழிதேடி இடம்பெயரும் மக்கள்
September 15, 2026, 10:17 pm
இன்றுமுதல் தாய்லாந்தில் விசா இல்லாத பயணம்: இனி ஒரு மாதம் மட்டுமே
September 15, 2026, 10:44 am
