செய்திகள் உலகம்
தென்கிழக்கு பிரான்சில் பனிச்சரிவில் சிக்கி மூன்று சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர்
பாரிஸ்:
தென்கிழக்கு பிரான்சில் உள்ள வால்-டி’இசேர் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, மூன்று சறுக்கு (ski) வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸ் நாளிதழான 'Le Monde' வெளியிட்ட தகவலின்படி, பனிச்சரிவு ஆறு சறுக்கு வீரர்களைத் தாக்கியது குறிப்பிடத்தக்கது. இவர்களில் நான்கு பேர் வழிகாட்டியுடன் சென்றிருந்தனர்.
மீட்பு குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றபோதும், மூன்று பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது. அனைத்து வீரர்களும் பனிச்சரிவு எச்சரிக்கை ஒளிபரப்பி கருவிகளுடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய வானிலை சேவையான 'Meteo-France', வியாழக்கிழமை சாவோய் பகுதிக்கு பனிச்சரிவு அபாயம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வால்-டி’இசேர், சாவோயில் அமைந்துள்ள பிரபலமான குளிர்கால விளையாட்டு மையமாகும். சமீப காலமாக இந்தப் பகுதியில் பனிச்சரிவால் பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 7:00 pm
அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரான் கடற்படையினர் தாயகம் அனுப்பப்படுகின்றனர்
March 13, 2026, 6:58 pm
ஈரானில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குச் உதவும் சீனா
March 13, 2026, 5:28 pm
உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு: ரஷ்ய எண்ணெய் மீதான தடையை வேறுவழியின்றி நீக்கியது அமெரிக்கா
March 13, 2026, 11:11 am
மேற்கு ஈராக்கில் அமெரிக்க எரிபொருள் விமானம் விபத்து
March 12, 2026, 6:11 pm
வளைகுடா போரின் தாக்கம்: உலக எண்ணெய் விலை US$100 ஐ கடந்தது
March 12, 2026, 6:08 pm
அமெரிக்காவின் விசாரணை ‘அரசியல் தந்திரமா?’: சீனா குற்றச்சாட்டு
March 12, 2026, 5:28 pm
ஒரே வாரத்தில் 32 முறை வெடித்து சிதறிய செமேரு: பீதியில் பொதுமக்கள்
March 12, 2026, 4:52 pm
மேற்கு ஆசியா போரை முடிவுக்குக் கொண்டு வர 3 நிபந்தனைகள்: ஈரான் அதிபர் மசூத்
March 12, 2026, 3:57 pm
