செய்திகள் இந்தியா
தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பதவியேற்றார்
ஹைதராபாத்:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முஹம்மது அசாருதீன் இன்று தெலங்கானா அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், முஹம்மது அசாருதீன் அமைச்சராக நியமிக்கப்படுவார் என பேசப்பட்டு வந்தது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக, சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத அவரை ஆளுநர் கோட்டாவில் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு செய்ய தெலங்கானா அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் மாதம் ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. எனினும், இந்த பரிந்துரைக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.
இந்நிலையில், அசாருதீன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இதற்கான விழாவில், ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா, அசாருதீனுக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இதில், முதல்வர் ரேவந்த் ரெட்டி, அசாருதீன் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2026, 12:39 pm
அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்
May 11, 2026, 11:02 am
திருமணத்துக்கு யாரும் தங்கம் வாங்கவேண்டாம்: இந்தியர்களுக்கு மோடி எச்சரிக்கை
May 8, 2026, 4:20 pm
மம்தா ராஜினாமா செய்யாததால் மேற்கு வங்க சட்டப்பேரவை கலைப்பு
May 6, 2026, 5:29 pm
அரபிக்கடலில் சிக்கி தவித்த இந்திய கப்பல் பணியாளர்களுக்கு பாகிஸ்தான் கடற்படை உதவி
May 6, 2026, 12:44 pm
வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம்: இந்தியா முதலிடம்
May 6, 2026, 11:03 am
ஊடுருவலைத் தடுக்க முதலைகளா?: எல்லைப் பாதுகாப்புப் படையின் யோசனையும் எழும் எதிர்ப்பும்
May 4, 2026, 4:01 pm
