நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோழி இறக்குமதிக்கு அனுமதி: விலை குறையும் என்கிறார் அமைச்சர்

அலோர்காஜா:

கோழிகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி அளித்திருப்பது உள்நாட்டுச் சந்தையில் அவற்றின் விலை குறைய உதவும் என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகாரங்களுக்கான அமைச்சின் செயலாளர் டத்தோஸ்ரீ ஹஸ்னுல் ஜம் ஜம் அஹ்மத் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி நடவடிக்கையின் காரணமாக உள்ளூர் சந்தையில் கோழிகளின் வரத்து அதிகமாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், உற்பத்தி செய்யும் நாடுகள் நிர்ணயிக்கும் விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் பொறுத்தே உள்ளூர் சந்தையில் கோழிகளின் விலை தீர்மானிக்கப்படுகிறது என்றும் Hasnol Zam Zam Ahmad மேலும் கூறினார்.

"பொதுவாக, வரத்து அதிகரிக்கும்போது உள்ளூர் சந்தையில் விலை குறைவு ஏற்படும். அதாவது நாம் கோழிகளை வாங்கும் நாடுகள் மிகக் குறைவான விலையை நிர்ணயிக்கும் பட்சத்தில் உள்நாட்டு வணிகர்களும் குறைவான விலையில் அவற்றை விற்கக்கூடும்.  

"எனினும் இதுகுறித்து முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. இந்த விஷயத்தை தற்போது வேளாண் மற்றும் உணவு தொழில்களுக்கான அமைச்சு கவனித்து வருகிறது," என்றார் அமைச்சர் ஹஸ்னுல் ஜம் ஜம் அஹ்மத்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset