நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூன்று வாகனங்கள் மோதிய விபத்து: மூன்று ஆண்கள் உயிரிழப்பு

குவா மூசாங்

கம்போங் பாலோ அருகே உள்ள குவா மூசாங் –குவாலா கிராய் சாலையில் இன்று ஏற்பட்ட மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில், மூன்று ஆண்கள் உயிரிழந்ததுடன், மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

பலத்த காயங்களின் காரணமாக அந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த விபத்து குறித்த அவசர அழைப்பை மதியம் 1.01 மணிக்கு பெற்றதாக கிளந்தான் மாநில தீயணைப்பு, மீட்பு துறை (JBPM) செய்தித் தொடர்பாளர் கூறினார்.

குவா மூசாங் தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து குழு மதியம் 1.43 மணிக்கு சம்பவ இடத்தை அடைந்தது.

“சம்பவ இடத்தை அடைந்தபோது, மூன்று வாகனங்கள் தொடர்புடைய விபத்து ஏற்பட்டிருப்பதும், மொத்தம் ஆறு பேர் சம்பந்தப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. இதில் மூன்று பேர் வாகனங்களில் சிக்கியிருந்த நிலையில், அவர்கள் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.

“மீதமுள்ள மூன்று பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset