நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொதுத் தேர்தல் வரை அம்னோ ஒற்றுமை அரசாங்கத்தில் இருக்க அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்: ஜாஹித்

கோலாலம்பூர்:

அடுத்த பொதுத் தேர்தல் வரை அம்னோ ஒற்றுமை அரசாங்கத்தில் இருக்க அடிமட்ட உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

நாட்டிம் 16ஆவது பொதுத் தேர்தல் வரை ஒற்றுமை அரசாங்கத்துடன் இருக்க வேண்டும் என்ற கட்சியின் முடிவுக்கு அடிமட்ட உறுப்பினர்க்ளின் ஆதரவைப் பெறுவேன்.
இந்த நிலைப்பாடு எனது தனிப்பட்ட திறனில் இல்லை.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் பணியகக் கூட்டம், உச்ச செயற்குழுக் கூட்டம், பொதுப் பேரவை ஆகியவற்றின் மூலம் கட்சியின் நிலைப்பாட்டைக் கொண்டு வந்தது.

அதன் அடிப்படையில். கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல. 

அம்னோ  நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒற்றுமை அரசாங்கம் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.

எனக்கு ஆதரவு கிடைப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது எனது நிலைப்பாட்டின் விஷயம் அல்ல.

அனைவருக்கும் இதில் பங்கு உள்ளது என்று ஜாஹித் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset